• Aug 19 2026

கொழும்பில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்

dorin / Aug 18th 2026, 1:33 pm
image

2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘India House’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் நாட்டுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை வாசித்தார்.

2இவ்வாண்டு, இந்திய உயர்ஸ்தானிகரகம் ‘சூரியபத் திரங்கா’ (Suryapath Tiranga) எனும் உலகளாவிய கொடி ஏற்றும் முயற்சியிலும் பங்கேற்றது.

வெவ்வேறு நேர மண்டலங்களில் சூரியனின் பயணத்தைப் பின்தொடரும் வகையில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களால் தொடர்ச்சியாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வாக இது அமைந்தது.

நேபாளத்தின் காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து தொடர்ந்த இந்த நிகழ்வில் இலங்கையில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மாலத்தீவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த அடையாளப்பூர்வமான கொடி ஏற்றும் நிகழ்வைத் தொடர்ந்தது.

பல்வேறு கலாசார நிகழ்வுகளும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டின. இலங்கை கடற்படையின் இசைக்குழு வீரத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் இனிமையான இசையை வழங்கியது. அதேவேளை, சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்தின் (SVCC) மாணவர்கள் பிரபலமான தேசபக்திப் பாடல்களைப் பாடி கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.

இந்திய உயர்ஸ்தானிகரும், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகளும் இலங்கையில் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த இந்திய அமைதிப்படையினரின் (IPKF) நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகரகமும் சுவாமி விவேகானந்த கலாசார நிலையமும் இணைந்து மதுபனி ஓவியப் பயிற்சி, வார்லி பழங்குடியினக் கலைப் பயிற்சி, இந்தியா–இலங்கை மைத்ரி சிறுவர் ஓவியப் போட்டி மற்றும் ‘India Through My Lens’ எனும் புகைப்படப் போட்டி ஆகியவற்றை நடத்தியது.

இலங்கைப் பங்கேற்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் புவியியல், கலாசாரம், உணவு வகைகள் மற்றும் மக்கள் வாழ்க்கை தொடர்பான தனித்துவமான புகைப்படங்கள் இதில் இடம்பெற்றன.

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகளவில் நடத்தப்பட்ட ‘Bharat Ko Janiye’ (இந்தியாவை அறிந்துகொள்வோம்) வினாடி வினா போட்டியிலும் இலங்கையர்கள் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள்-மக்கள் உறவுகளை வெளிப்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்த சிறந்த வெற்றியாளர்கள் 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி India House இல் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் இந்திய உயர்ஸ்தானிகரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

கொழும்பைச் சேர்ந்த பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் பங்கேற்புடன் ‘வந்தே மாதரம்’ பாடலின் கூட்டுப் பாடல் நிகழ்ச்சிகளும், பிரபல இந்திய பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


அத்துடன், ஒவ்வொரு இந்தியரும் தமது தேசியக் கொடியை ஏற்றி, திரங்காவுடன் புகைப்படம் எடுத்து பகிர்வதை ஊக்குவிக்கும் ‘Har Ghar Tiranga’ உலகளாவிய பிரசாரத்திலும் இலங்கையில் பெருமளவானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, இந்திய உயர்ஸ்தானிகரகம் ‘Har Ghar Tiranga’ என்ற சிறப்பு கண்காட்சியையும் ஏற்பாடு செய்தது. இதில் இந்திய தேசியக் கொடியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், அத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேசியப் பாடல் ஆற்றிய பங்கு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டியிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரகம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

 பின்னர், இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘Swar Sangam – A Fusion Symphony’ எனும் சிறப்பு கலாசார இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா சிறப்பாக பங்கேற்றதுடன், பிரபல இலங்கைப் பாடகி யொஹானியும் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கினார்.

மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு Havelock City Mall, சுவாமி விவேகானந்த கலாசார நிலையம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றுடன் இணைந்து ‘India Fest 2026’ எனும் இரு நாள் விழாவை ஆகஸ்ட் 15 முதல் 16ஆம் திகதி வரை நடத்தியது. இவ்விழாவில் இந்திய ஆடை அலங்காரங்கள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், நேரடி கலைநிகழ்ச்சிகள், திரைப்படத் திரையிடல்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று, இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை பொதுமக்கள் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியது.


கொழும்பில் இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வு, இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான ‘India House’ இல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் நாட்டுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை வாசித்தார்.2இவ்வாண்டு, இந்திய உயர்ஸ்தானிகரகம் ‘சூரியபத் திரங்கா’ (Suryapath Tiranga) எனும் உலகளாவிய கொடி ஏற்றும் முயற்சியிலும் பங்கேற்றது. வெவ்வேறு நேர மண்டலங்களில் சூரியனின் பயணத்தைப் பின்தொடரும் வகையில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களால் தொடர்ச்சியாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வாக இது அமைந்தது. நேபாளத்தின் காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து தொடர்ந்த இந்த நிகழ்வில் இலங்கையில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மாலத்தீவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த அடையாளப்பூர்வமான கொடி ஏற்றும் நிகழ்வைத் தொடர்ந்தது.பல்வேறு கலாசார நிகழ்வுகளும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டின. இலங்கை கடற்படையின் இசைக்குழு வீரத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் இனிமையான இசையை வழங்கியது. அதேவேளை, சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்தின் (SVCC) மாணவர்கள் பிரபலமான தேசபக்திப் பாடல்களைப் பாடி கலைநிகழ்ச்சிகளை வழங்கினர்.இந்திய உயர்ஸ்தானிகரும், இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகளும் இலங்கையில் அமைதியையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த இந்திய அமைதிப்படையினரின் (IPKF) நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகரகமும் சுவாமி விவேகானந்த கலாசார நிலையமும் இணைந்து மதுபனி ஓவியப் பயிற்சி, வார்லி பழங்குடியினக் கலைப் பயிற்சி, இந்தியா–இலங்கை மைத்ரி சிறுவர் ஓவியப் போட்டி மற்றும் ‘India Through My Lens’ எனும் புகைப்படப் போட்டி ஆகியவற்றை நடத்தியது. இலங்கைப் பங்கேற்பாளர்களால் பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் புவியியல், கலாசாரம், உணவு வகைகள் மற்றும் மக்கள் வாழ்க்கை தொடர்பான தனித்துவமான புகைப்படங்கள் இதில் இடம்பெற்றன.இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகளவில் நடத்தப்பட்ட ‘Bharat Ko Janiye’ (இந்தியாவை அறிந்துகொள்வோம்) வினாடி வினா போட்டியிலும் இலங்கையர்கள் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள்-மக்கள் உறவுகளை வெளிப்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்த சிறந்த வெற்றியாளர்கள் 2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி India House இல் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு முழுவதும் இந்திய உயர்ஸ்தானிகரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. கொழும்பைச் சேர்ந்த பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் பங்கேற்புடன் ‘வந்தே மாதரம்’ பாடலின் கூட்டுப் பாடல் நிகழ்ச்சிகளும், பிரபல இந்திய பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.அத்துடன், ஒவ்வொரு இந்தியரும் தமது தேசியக் கொடியை ஏற்றி, திரங்காவுடன் புகைப்படம் எடுத்து பகிர்வதை ஊக்குவிக்கும் ‘Har Ghar Tiranga’ உலகளாவிய பிரசாரத்திலும் இலங்கையில் பெருமளவானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, இந்திய உயர்ஸ்தானிகரகம் ‘Har Ghar Tiranga’ என்ற சிறப்பு கண்காட்சியையும் ஏற்பாடு செய்தது. இதில் இந்திய தேசியக் கொடியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம், அத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தேசியப் பாடல் ஆற்றிய பங்கு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டியிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரகம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பின்னர், இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘Swar Sangam – A Fusion Symphony’ எனும் சிறப்பு கலாசார இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா சிறப்பாக பங்கேற்றதுடன், பிரபல இலங்கைப் பாடகி யொஹானியும் சிறப்பு நிகழ்ச்சியை வழங்கினார்.மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு Havelock City Mall, சுவாமி விவேகானந்த கலாசார நிலையம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றுடன் இணைந்து ‘India Fest 2026’ எனும் இரு நாள் விழாவை ஆகஸ்ட் 15 முதல் 16ஆம் திகதி வரை நடத்தியது. இவ்விழாவில் இந்திய ஆடை அலங்காரங்கள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், நேரடி கலைநிகழ்ச்சிகள், திரைப்படத் திரையிடல்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்று, இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை பொதுமக்கள் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியது.

Advertisement

Advertisement

Advertisement