இலங்கையில் நடைபெறும் தொடர் ஒன்றில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் 'ஏ' அணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை 'ஏ', இந்தியா 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 'ஏ' அணித் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி முதல் ஜூன் 21 வரை தம்புள்ளையில் முத்தரப்பு ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது.
இதில் இந்தியா 'ஏ' அணியானது இலங்கை 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த நிலையிலேயே இந்திய கிரிக்கெட் “ஏ” அணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்திய அணியின் சிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். அதிலும் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இந்தத் தொடரில் பங்கேற்கின்றார்.
கிரிக்கெட்டின் மிகத் திறமையான இளம் வீரர்களில் ஒருவரான சூர்யவன்ஷி சமீப காலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார். சமீபத்தில் இடம்பெற்ற IPL கிரிக்கெட் தொடரில் சிறந்த இளம் வீரர், அதிக ரன்கள் பெற்ற வீரர், ஒரேஞ் கப் உள்ளிட்ட பல சாம்பின்களை அவர் தட்டித்தூக்கியுள்ளார்.
தற்போது முன்னிலையில் வளர்ந்து வரும் வீரரான சூர்யவன்ஷி, இன்று நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார்.
பலரும் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுத்தும் அவரைப் பார்த்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த இந்திய கிரிக்கெட் “ஏ” அணி - கவனத்தை ஈர்த்த சூர்யவன்ஷி இலங்கையில் நடைபெறும் தொடர் ஒன்றில் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் 'ஏ' அணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை 'ஏ', இந்தியா 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு 'ஏ' அணித் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி முதல் ஜூன் 21 வரை தம்புள்ளையில் முத்தரப்பு ஒருநாள் தொடர் இடம்பெறவுள்ளது. இதில் இந்தியா 'ஏ' அணியானது இலங்கை 'ஏ' மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.இந்த நிலையிலேயே இந்திய கிரிக்கெட் “ஏ” அணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.இந்திய அணியின் சிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர். அதிலும் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இந்தத் தொடரில் பங்கேற்கின்றார். கிரிக்கெட்டின் மிகத் திறமையான இளம் வீரர்களில் ஒருவரான சூர்யவன்ஷி சமீப காலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார். சமீபத்தில் இடம்பெற்ற IPL கிரிக்கெட் தொடரில் சிறந்த இளம் வீரர், அதிக ரன்கள் பெற்ற வீரர், ஒரேஞ் கப் உள்ளிட்ட பல சாம்பின்களை அவர் தட்டித்தூக்கியுள்ளார். தற்போது முன்னிலையில் வளர்ந்து வரும் வீரரான சூர்யவன்ஷி, இன்று நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். பலரும் ஓடிச்சென்று அவருடன் செல்பி எடுத்தும் அவரைப் பார்த்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.