• Sep 17 2026

இலங்கையை விட்டு நகரும் தளம்பல் நிலை – மழை தொடரும்! தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்!

Chithra / Sep 16th 2026, 10:44 am
image


நாட்டின் பல பிரதான ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்ட போதிலும், தற்போது எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலங்களில் பல பிரதான ஆற்றுப் படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.


இதன்படி, கிங் கங்கையின் கீழ் படுகையில் பத்தேகமவை அண்மித்த சில பகுதிகளில் சுமார் 125 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


களு கங்கையின் மேல் படுகையான இரத்தினபுரி பகுதியில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கீழ் படுகையில் கெஸ்பேவவை அண்மித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


அத்துடன், கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


மகாவலி கங்கையின் மேல் படுகைக்குட்பட்ட பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலும், அம்பாறை கல்ஓயா ஆற்றுப் படுகையை அண்மித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அனுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும் நிலை தற்போது காணப்படவில்லை என பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தற்போது பெய்துவரும் மழை குறுகிய காலப்பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளதால், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலை தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, அதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


எனினும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


அத்துடன், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


ஏனைய கடல் பிராந்தியங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்தும் அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்தும் காற்று வீசக்கூடும்.


காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.


இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அச்சமயங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையை விட்டு நகரும் தளம்பல் நிலை – மழை தொடரும் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நாட்டின் பல பிரதான ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்ட போதிலும், தற்போது எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் பல பிரதான ஆற்றுப் படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.இதன்படி, கிங் கங்கையின் கீழ் படுகையில் பத்தேகமவை அண்மித்த சில பகுதிகளில் சுமார் 125 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.களு கங்கையின் மேல் படுகையான இரத்தினபுரி பகுதியில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கீழ் படுகையில் கெஸ்பேவவை அண்மித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.அத்துடன், கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.மகாவலி கங்கையின் மேல் படுகைக்குட்பட்ட பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா பகுதிகளைச் சூழவுள்ள இடங்களில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலும், அம்பாறை கல்ஓயா ஆற்றுப் படுகையை அண்மித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அனுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும் நிலை தற்போது காணப்படவில்லை என பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.இதேவேளை, தற்போது பெய்துவரும் மழை குறுகிய காலப்பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளதால், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலை தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, அதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.அத்துடன், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஏனைய கடல் பிராந்தியங்களின் சில பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்தும் அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்தும் காற்று வீசக்கூடும்.காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அச்சமயங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement