• Oct 02 2026

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

dorin / Oct 2nd 2026, 2:16 pm
image

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிரதான அலுவலகம் இன்று (02.10.2026) காலை 9.00 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா அவர்களால் புதிய அலுவலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகம் இயங்கி வந்த நிலையில், இன்று முதல் அது மாவட்ட பிரதான அலுவலகமாகத் தரம் உயர்த்தப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக இதற்கு முன்னர் வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

இதனால் நீண்ட தூரப் பயணம், போக்குவரத்துச் செலவு மற்றும் நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

இந்நிலையில், மன்னாரிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை, மாவட்ட மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை இலகுவாக முன்வைக்கவும், உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து செயற்படுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திறப்பு நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் G.P.D. பெர்னாண்டோ, ஜெயதிலக்க இந்திக, நிதிப் பிரிவு அதிகாரி லால் வீரசிங்க, விசாரணை மற்றும் புலனாய்வுப் பணிப்பாளர் கபிலன் வில்வராஜன், காலிஸ்டஸ் அருணகுமார, சட்ட உத்தியோகத்தர் மற்றும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் உத்தியோகத்தர் M.T.M. இர்ஷாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன், மன்னார் மாவட்டச் அரசாங்க அதிபர், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், இலங்கை இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட பிரதான அலுவலகம் இன்று (02.10.2026) காலை 9.00 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா அவர்களால் புதிய அலுவலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.இதுவரை மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகம் இயங்கி வந்த நிலையில், இன்று முதல் அது மாவட்ட பிரதான அலுவலகமாகத் தரம் உயர்த்தப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளது.மன்னார் மாவட்ட மக்கள் மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக இதற்கு முன்னர் வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.இதனால் நீண்ட தூரப் பயணம், போக்குவரத்துச் செலவு மற்றும் நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர்.இந்நிலையில், மன்னாரிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை, மாவட்ட மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான முறைப்பாடுகளை இலகுவாக முன்வைக்கவும், உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.மேலும், மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து செயற்படுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.திறப்பு நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் G.P.D. பெர்னாண்டோ, ஜெயதிலக்க இந்திக, நிதிப் பிரிவு அதிகாரி லால் வீரசிங்க, விசாரணை மற்றும் புலனாய்வுப் பணிப்பாளர் கபிலன் வில்வராஜன், காலிஸ்டஸ் அருணகுமார, சட்ட உத்தியோகத்தர் மற்றும் மன்னார் மாவட்ட மனித உரிமைகள் உத்தியோகத்தர் M.T.M. இர்ஷாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அத்துடன், மன்னார் மாவட்டச் அரசாங்க அதிபர், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், இலங்கை இராணுவத்தின் 54ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement