இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் மே 26 ஆம் திகதி மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.
இத்தொலைக்காட்சி கலையகத்தைத் திறந்துவைப்பதற்குச் சமாந்தரமாக, மாணவர்களின் நடைமுறை மற்றும் கல்விச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல இணை நிலையங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.
அதற்கமைய, மாணவர்கள் இணைய வானொலி அலைவரிசைகள் உள்ளிட்ட கல்விச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் ஒலிபரப்புக் கலையகம், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம், பாலினச் சமத்துவம் மற்றும் நீதி மையம் ஆகியனவும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்குச் சமாந்தரமாக, அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இனங்கண்டு, அப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றித் தொடர்வதற்காக மடிக்கணினிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும், சுற்றாடல் நேய பசுமைப் கொள்கை (UOVT Greening Policy) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வும் இடம்பெற்றன.
இக்கொள்கையின் ஊடாகப் பல்கலைக்கழகத்திற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து நிர்மாண மற்றும் அபிவிருத்திப் பணிகளும் பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகத்தைக் கார்பன் வெளியேற்றமற்ற சூழல் அலகாக மாற்றி அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, தொழில்சார் கல்வியைக் கற்கும் மாணவர்களைக் கைத்தொழில் துறையில் பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளுக்காக அதிகளவில் ஊக்குவிப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.இந்நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்த முக்கிய நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.
இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஊடகத் தொகுதிக்கு நவீன வசதிகள் கையளிப்பு இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் மே 26 ஆம் திகதி மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.இத்தொலைக்காட்சி கலையகத்தைத் திறந்துவைப்பதற்குச் சமாந்தரமாக, மாணவர்களின் நடைமுறை மற்றும் கல்விச் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல இணை நிலையங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.அதற்கமைய, மாணவர்கள் இணைய வானொலி அலைவரிசைகள் உள்ளிட்ட கல்விச் சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் ஒலிபரப்புக் கலையகம், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம், பாலினச் சமத்துவம் மற்றும் நீதி மையம் ஆகியனவும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.இந்த நிகழ்வுக்குச் சமாந்தரமாக, அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இனங்கண்டு, அப்பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தடையின்றித் தொடர்வதற்காக மடிக்கணினிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வும், சுற்றாடல் நேய பசுமைப் கொள்கை (UOVT Greening Policy) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வும் இடம்பெற்றன.இக்கொள்கையின் ஊடாகப் பல்கலைக்கழகத்திற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து நிர்மாண மற்றும் அபிவிருத்திப் பணிகளும் பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 2030 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழகத்தைக் கார்பன் வெளியேற்றமற்ற சூழல் அலகாக மாற்றி அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு, தொழில்சார் கல்வியைக் கற்கும் மாணவர்களைக் கைத்தொழில் துறையில் பசுமை எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளுக்காக அதிகளவில் ஊக்குவிப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.இந்நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.இந்த முக்கிய நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.