• Sep 08 2026

இரண்டு வருடங்களிலேயே கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது – ஜானக வக்கும்புர விமர்சனம்

Chithra / Sep 7th 2026, 3:40 pm
image


தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.


பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.09.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புளத்சிங்ஹலயவில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது பேரணியில் நாற்காலிகளை இடைவெளிவிட்டு போட்டு ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.


 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் பிரம்மாண்ட கூட்டங்களை நடத்திய இவர்கள், தற்போது 1,800 முதல் 2,000 பேருக்கு மேல் சேர்க்க முடியாத ஒரு கூடாரத்திற்குள் கூட்டத்தை நடத்திவிட்டு மக்கள் கூட்டம் வந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என்றும், அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் மக்கள் ஆதரவு இன்மையையும் இதுவே வெளிச்சம்போட்டு காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


அத்துடன், இக்கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதியிடமிருந்து ஏதேனும் பொருளாதார நிவாரண அறிவிப்புகள் வரும் என பெரிதும் எதிர்பார்த்த போதிலும், "திருடர்களைப் பிடிப்போம்" என்ற பழைய கதைகளையே மீண்டும் கேட்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


 முன்பெல்லாம் ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்த மக்கள், தற்போது கைதட்டுவதற்குக் கூட முன்வரவில்லை என்றும், அமைப்பாளர்களே கேட்டுக்கொண்ட பின்னரே கைதட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.


நாட்டில் மக்கள் குடிநீரின்றியும் உணவின்றியும் தவிக்கும் சூழலில், தங்களின் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு வேலை செய்யாமல், இவ்வாறான கூட்டங்களுக்கு பணத்தை வீணடிப்பதை விடுத்து மக்களுக்கு குடிநீர் போத்தல்களையாவது வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்தார். 


மேலும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்க்கட்சி பயப்படாது எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்கு உண்மையான மக்கள் பலத்தைக் காட்டுவதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் கூடாரங்களுக்குள் அல்லாமல், மைதானங்கள் மற்றும் வீதிகள் அடங்கலாக மக்கள் வெள்ளத்துடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்திக் காட்டவுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் முற்போக்குவாத மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களிலேயே கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது – ஜானக வக்கும்புர விமர்சனம் தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.09.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புளத்சிங்ஹலயவில் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலாவது பேரணியில் நாற்காலிகளை இடைவெளிவிட்டு போட்டு ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் பிரம்மாண்ட கூட்டங்களை நடத்திய இவர்கள், தற்போது 1,800 முதல் 2,000 பேருக்கு மேல் சேர்க்க முடியாத ஒரு கூடாரத்திற்குள் கூட்டத்தை நடத்திவிட்டு மக்கள் கூட்டம் வந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என்றும், அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் மக்கள் ஆதரவு இன்மையையும் இதுவே வெளிச்சம்போட்டு காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், இக்கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதியிடமிருந்து ஏதேனும் பொருளாதார நிவாரண அறிவிப்புகள் வரும் என பெரிதும் எதிர்பார்த்த போதிலும், "திருடர்களைப் பிடிப்போம்" என்ற பழைய கதைகளையே மீண்டும் கேட்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்பெல்லாம் ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்த மக்கள், தற்போது கைதட்டுவதற்குக் கூட முன்வரவில்லை என்றும், அமைப்பாளர்களே கேட்டுக்கொண்ட பின்னரே கைதட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.நாட்டில் மக்கள் குடிநீரின்றியும் உணவின்றியும் தவிக்கும் சூழலில், தங்களின் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு வேலை செய்யாமல், இவ்வாறான கூட்டங்களுக்கு பணத்தை வீணடிப்பதை விடுத்து மக்களுக்கு குடிநீர் போத்தல்களையாவது வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்தார். மேலும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்க்கட்சி பயப்படாது எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திற்கு உண்மையான மக்கள் பலத்தைக் காட்டுவதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் கூடாரங்களுக்குள் அல்லாமல், மைதானங்கள் மற்றும் வீதிகள் அடங்கலாக மக்கள் வெள்ளத்துடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்திக் காட்டவுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் முற்போக்குவாத மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement