யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுதல், அதற்காக சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகளுக்கு முரணான பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது, அதன் ஊடாக தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அநியாயமான கைதுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், பல தசாப்தங்களாகத் தீர்வின்றித் தொடரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நீடித்து நிலைக்கக்கூடிய கௌரவமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடரும் காணி பறிப்பு மற்றும் உள்ளக இடப்பெயர்வுகள், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் சிங்களமயமாக்கல் திட்டமான கீழ் மல்வத்து ஓயா திட்டம் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து யாழ். ஆயருடன் சிறீதரன் எம்.பி. முக்கிய கலந்துரையாடல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுதல், அதற்காக சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.மேலும், மனித உரிமைகளுக்கு முரணான பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது, அதன் ஊடாக தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அநியாயமான கைதுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.அத்துடன், பல தசாப்தங்களாகத் தீர்வின்றித் தொடரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நீடித்து நிலைக்கக்கூடிய கௌரவமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடரும் காணி பறிப்பு மற்றும் உள்ளக இடப்பெயர்வுகள், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் சிங்களமயமாக்கல் திட்டமான கீழ் மல்வத்து ஓயா திட்டம் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.