• Oct 02 2026

சிறுவர்களின் எதிர்காலத்திற்காக உடனடி தலையீடு அவசியம் – சஜித்

Aathira / Oct 1st 2026, 8:55 am
image

பாதுகாப்பான எதிர்காலத்திற்காக படைப்பாற்றல் மிக்க சிறுவர் தலைமுறையை உருவாக்க வேண்டுமெனில், தற்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு பொறுப்பான தரப்பினர் உடனடியாக தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ள சஜித், அவர்களின் நலனை உறுதி செய்வது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்கால சவால்களை சமாளிக்கக்கூடிய கல்வியை சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், ஆரம்பகால குழந்தை வளர்ப்பிலிருந்து பாடசாலைக் கல்வி வரை விரிவான மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறுவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பது தொடர்பிலும், கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக்கொள்வதில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக அழுத்தங்களால் சிறுவர்கள் பல்வேறு ஆபத்துகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகும் நிலை குறித்து உரிய ஆய்வுகளும் நடவடிக்கைகளும் அவசியம் என சஜித் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களின் அதிகரித்த பயன்பாடு காரணமாக சிறுவர்களும் முதியோரும் எதிர்கொள்ளக்கூடிய புதிய சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ப, அரச கொள்கைகள் மற்றும் சமூக விழுமியங்களை வழிநடத்தும் மத நிறுவனங்களும் தமது பொறுப்புகளை மீளாய்வு செய்து புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் போன்ற விசேட தினங்களில் மட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பதிலாக, சிறுவர்களையும் முதியோர்களையும் பாதுகாக்கும் தொடர்ச்சியான செயல் திட்டம் அவசியம் என

சிறுவர்களின் எதிர்காலத்திற்காக உடனடி தலையீடு அவசியம் – சஜித் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக படைப்பாற்றல் மிக்க சிறுவர் தலைமுறையை உருவாக்க வேண்டுமெனில், தற்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு பொறுப்பான தரப்பினர் உடனடியாக தலையிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.ஒரு நாட்டின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ள சஜித், அவர்களின் நலனை உறுதி செய்வது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.இலங்கையில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்கால சவால்களை சமாளிக்கக்கூடிய கல்வியை சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், ஆரம்பகால குழந்தை வளர்ப்பிலிருந்து பாடசாலைக் கல்வி வரை விரிவான மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.அதேவேளை, சிறுவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பது தொடர்பிலும், கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக்கொள்வதில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமைகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக அழுத்தங்களால் சிறுவர்கள் பல்வேறு ஆபத்துகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகும் நிலை குறித்து உரிய ஆய்வுகளும் நடவடிக்கைகளும் அவசியம் என சஜித் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களின் அதிகரித்த பயன்பாடு காரணமாக சிறுவர்களும் முதியோரும் எதிர்கொள்ளக்கூடிய புதிய சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மாறிவரும் சமூக சூழலுக்கு ஏற்ப, அரச கொள்கைகள் மற்றும் சமூக விழுமியங்களை வழிநடத்தும் மத நிறுவனங்களும் தமது பொறுப்புகளை மீளாய்வு செய்து புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் போன்ற விசேட தினங்களில் மட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பதிலாக, சிறுவர்களையும் முதியோர்களையும் பாதுகாக்கும் தொடர்ச்சியான செயல் திட்டம் அவசியம் என

Advertisement

Advertisement

Advertisement