மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு முதல்வரின் வேலைத்திட்டங்களை ஆளுநர் தடுத்து நிறுத்த முடியும் என்றால், இந்த மாநகரசபை இயங்க வேண்டிய அவசியம் என்ன என்று வவுனியா மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வவுனியா மாநகரசபை மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடாகவே அமைகின்றது. வட்டாரங்களின் தேவைகளை அறிந்து செயற்படும் முதல்வரைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு முரணானது.
திருநாவற்குளம் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் துயரம் ஆளுநருக்குத் தெரியுமா? அந்த மக்களின் கஷ்டங்களை உணர்ந்து முதல்வர் முன்னெடுத்த பணிகளைத் தடுத்திருப்பது வேதனைக்குரியது.
சபையைச் சரியாக வழிநடத்த விடாமல் குழப்பம் விளைவிக்கும் அரச தரப்பு உறுப்பினர்களும், அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களும் இருக்கும் வரை எவராலும் சபையைச் சிறப்பாக நடத்த முடியாது."
அங்காடி வியாபாரிகள் விவகாரம் நிர்வாகச் சீர்கேடு என்ற குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அவர்,
"பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பகுதியில் ஏற்கனவே அங்காடி கடைகள் இயங்கி வந்தன. வீதியோரங்களில் வியாபாரம் செய்தவர்களைத் தற்காலிகமாகவே அங்கு அமர்த்தினோம். இப்போது அது இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிகின்றது. அப்படியானால் அவர்களை மீண்டும் வீதிக்கே கொண்டு செல்லச் சொல்கிறார்களா?
ஆளும் தரப்பு உறுப்பினர்களின் அனுமதியுடன், மக்களின் நலன் கருதியே முதல்வர் சில தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார். இதில் முறைகேடுகள் எதுவுமில்லை."
வவுனியா மாநகரசபை முடக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் பாரிய அரசியல் மற்றும் வர்த்தக நலன்கள் இருப்பதாக அவர் சாடினார்.
"வவுனியா வரலாற்றில் ஒரு உள்ளூராட்சிச் சபையைச் செயற்பட விடாமல் தடுத்திருப்பது இதுவே முதல் முறை. இதன் பின்னணியில் சட்டவிரோத மாடு வியாபாரிகளும், அதிகார மோகம் கொண்ட சில கயவர்களும் உள்ளனர்.
இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற NPP அரசின் நோக்கமே இந்த முடக்கத்திற்குப் பின்னாலுள்ள உண்மை" என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா முதல்வரின் செயற்பாடுகளை ஆளுநர் தடுத்தால் மாநகரசபை எதற்கு" -முன்னாள் பிரதி முதல்வர் கார்த்தீபன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு முதல்வரின் வேலைத்திட்டங்களை ஆளுநர் தடுத்து நிறுத்த முடியும் என்றால், இந்த மாநகரசபை இயங்க வேண்டிய அவசியம் என்ன என்று வவுனியா மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.வவுனியா மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,"வவுனியா மாநகரசபை மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடாகவே அமைகின்றது. வட்டாரங்களின் தேவைகளை அறிந்து செயற்படும் முதல்வரைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு முரணானது.திருநாவற்குளம் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் துயரம் ஆளுநருக்குத் தெரியுமா அந்த மக்களின் கஷ்டங்களை உணர்ந்து முதல்வர் முன்னெடுத்த பணிகளைத் தடுத்திருப்பது வேதனைக்குரியது.சபையைச் சரியாக வழிநடத்த விடாமல் குழப்பம் விளைவிக்கும் அரச தரப்பு உறுப்பினர்களும், அவர்களுக்குத் துணையாக இருப்பவர்களும் இருக்கும் வரை எவராலும் சபையைச் சிறப்பாக நடத்த முடியாது."அங்காடி வியாபாரிகள் விவகாரம் நிர்வாகச் சீர்கேடு என்ற குற்றச்சாட்டு குறித்துப் பேசிய அவர்,"பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பகுதியில் ஏற்கனவே அங்காடி கடைகள் இயங்கி வந்தன. வீதியோரங்களில் வியாபாரம் செய்தவர்களைத் தற்காலிகமாகவே அங்கு அமர்த்தினோம். இப்போது அது இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிகின்றது. அப்படியானால் அவர்களை மீண்டும் வீதிக்கே கொண்டு செல்லச் சொல்கிறார்களாஆளும் தரப்பு உறுப்பினர்களின் அனுமதியுடன், மக்களின் நலன் கருதியே முதல்வர் சில தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார். இதில் முறைகேடுகள் எதுவுமில்லை."வவுனியா மாநகரசபை முடக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் பாரிய அரசியல் மற்றும் வர்த்தக நலன்கள் இருப்பதாக அவர் சாடினார்."வவுனியா வரலாற்றில் ஒரு உள்ளூராட்சிச் சபையைச் செயற்பட விடாமல் தடுத்திருப்பது இதுவே முதல் முறை. இதன் பின்னணியில் சட்டவிரோத மாடு வியாபாரிகளும், அதிகார மோகம் கொண்ட சில கயவர்களும் உள்ளனர்.இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற NPP அரசின் நோக்கமே இந்த முடக்கத்திற்குப் பின்னாலுள்ள உண்மை" என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.