• Nov 18 2026

வவுனியா பல்கலைக்கழகத்தில் அடையாள வேலைநிறுத்தம் – தொடர்ச்சியான போராட்டம் நடத்தவும் எச்சரிக்கை!

Chithra / Nov 18th 2026, 3:59 pm
image


வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு (MCA) உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, கடந்த பல வருடங்களாகப் பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எனினும், தற்போதைய அரசாங்கமும் தமது கோரிக்கைகளை ஒருதலைப்பட்சமாக நிராகரித்துள்ளதாக ஊழியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.


2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதிலும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறிப்பாக, இதுவரை வழங்கப்பட்டு வந்த 20 சதவீத கொடுப்பனவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக நேரக் கொடுப்பனவு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஊழியர்கள், தமக்கு எதிராகத் தொடர்ச்சியாக அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமக்கான நியாயமான தீர்வுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படாவிட்டால், கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


வவுனியா பல்கலைக்கழகத்தில் அடையாள வேலைநிறுத்தம் – தொடர்ச்சியான போராட்டம் நடத்தவும் எச்சரிக்கை வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு (MCA) உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, கடந்த பல வருடங்களாகப் பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எனினும், தற்போதைய அரசாங்கமும் தமது கோரிக்கைகளை ஒருதலைப்பட்சமாக நிராகரித்துள்ளதாக ஊழியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதிலும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.குறிப்பாக, இதுவரை வழங்கப்பட்டு வந்த 20 சதவீத கொடுப்பனவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக நேரக் கொடுப்பனவு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஊழியர்கள், தமக்கு எதிராகத் தொடர்ச்சியாக அநீதிகள் இழைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமக்கான நியாயமான தீர்வுகள் அரசாங்கத்தினால் வழங்கப்படாவிட்டால், கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement