• Apr 21 2026

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி: மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Apr 7th 2026, 7:21 pm
image

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 115226126 என்பதனைப் போன்று தோற்றமளிக்கும் விதத்தில், +94115226126 மற்றும் +0115226126 ஆகிய இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளும் சில தரப்பினர், பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோருவதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், வட்ஸஅப் செய்திகள் ஊடாகவும் இவ்வாறான தகவல்கள் கோரப்படுகின்றன.குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எவரும் பொதுமக்களுக்கு அழைப்புக்களை ஏற்படுத்தமாட்டார்கள் எனத் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இவ்வாறான அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதையோ அல்லது உங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 5226100 எனும் இலக்கத்தையோ அல்லது www.drp.gov.lk எனும் இணையதளத்தையோ நாட முடியும்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய மோசடி: மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 115226126 என்பதனைப் போன்று தோற்றமளிக்கும் விதத்தில், +94115226126 மற்றும் +0115226126 ஆகிய இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொள்ளும் சில தரப்பினர், பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோருவதாகத் தெரியவந்துள்ளது.அத்துடன், வட்ஸஅப் செய்திகள் ஊடாகவும் இவ்வாறான தகவல்கள் கோரப்படுகின்றன.குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எவரும் பொதுமக்களுக்கு அழைப்புக்களை ஏற்படுத்தமாட்டார்கள் எனத் திணைக்களம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இவ்வாறான அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதையோ அல்லது உங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் 011 5226100 எனும் இலக்கத்தையோ அல்லது www.drp.gov.lk எனும் இணையதளத்தையோ நாட முடியும்.

Advertisement

Advertisement

Advertisement