ஜப்பானின் டோயாமா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கனமழை காரணமாக ஹிமி நகரில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை அதிகாரிகள் 5-ஆம் நிலை ‘அவசர பாதுகாப்பு’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதிக ஆபத்தான இந்த எச்சரிக்கை நிலையில், உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிமி நகரில் அனைத்து குடும்பங்களுக்கும் அவசர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொடர் கனமழையால் உள்ளூர் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹிமி நகரில் உள்ள உஜோஷோ ஆறு கரைபுரண்டு ஓடியதால், பல பகுதிகளில் பழுப்பு நிற வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சில குடியிருப்புகளில் தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது
இதனுடன், நகரின் பல்வேறு பகுதிகளில் 14 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மழையின் தீவிரத்துக்கு மற்றொரு முக்கிய காரணியாக ‘லைன்-ஷேப்டு மழை மேகம்’ உருவாகியுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே மிக அதிகமான மழை ஒரே பகுதியில் கொட்டித் தீர்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹிமி நகரில் 6 மணி நேரத்தில் 211 மில்லிமீட்டர் மழை பதிவானதாக ஜப்பான் வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன; சில இடங்களில் மழை அளவு 250 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம், ஆறுகளில் திடீர் நீர்மட்ட உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.
மேலும், டோயாமா மாகாணத்தின் பிற பகுதிகளிலும் கனமழை தொடர்பான எச்சரிக்கைகள் நீடித்து வருகின்றன. வரும் காலத்திலும் மீண்டும் கனமழை தீவிரமடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
5-ஆம் நிலை எச்சரிக்கை என்பது சாதாரண மழை எச்சரிக்கை அல்ல. ஏற்கனவே பேரிடர் ஏற்பட்டிருக்கலாம் அல்லது எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகலாம் என்பதைக் குறிக்கும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாகும். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜப்பானில் கொட்டித் தீர்த்த கனமழை ஜப்பானின் டோயாமா மாகாணத்தில் பெய்து வரும் மிகக் கனமழை காரணமாக ஹிமி நகரில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை அதிகாரிகள் 5-ஆம் நிலை ‘அவசர பாதுகாப்பு’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதிக ஆபத்தான இந்த எச்சரிக்கை நிலையில், உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹிமி நகரில் அனைத்து குடும்பங்களுக்கும் அவசர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, தொடர் கனமழையால் உள்ளூர் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிமி நகரில் உள்ள உஜோஷோ ஆறு கரைபுரண்டு ஓடியதால், பல பகுதிகளில் பழுப்பு நிற வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்புகளில் தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதுஇதனுடன், நகரின் பல்வேறு பகுதிகளில் 14 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.மழையின் தீவிரத்துக்கு மற்றொரு முக்கிய காரணியாக ‘லைன்-ஷேப்டு மழை மேகம்’ உருவாகியுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே மிக அதிகமான மழை ஒரே பகுதியில் கொட்டித் தீர்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஹிமி நகரில் 6 மணி நேரத்தில் 211 மில்லிமீட்டர் மழை பதிவானதாக ஜப்பான் வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன; சில இடங்களில் மழை அளவு 250 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம், ஆறுகளில் திடீர் நீர்மட்ட உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்ந்து அதிகமாக உள்ளது.மேலும், டோயாமா மாகாணத்தின் பிற பகுதிகளிலும் கனமழை தொடர்பான எச்சரிக்கைகள் நீடித்து வருகின்றன. வரும் காலத்திலும் மீண்டும் கனமழை தீவிரமடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.5-ஆம் நிலை எச்சரிக்கை என்பது சாதாரண மழை எச்சரிக்கை அல்ல. ஏற்கனவே பேரிடர் ஏற்பட்டிருக்கலாம் அல்லது எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகலாம் என்பதைக் குறிக்கும் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாகும். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.