• May 19 2026

பலத்த காற்றுடன் கனமழை; ஆபத்தை உணர்ந்தால் வெளியேறுமாறு எச்சரிக்கை

Chithra / May 19th 2026, 10:47 am
image

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


இதேவேளை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கையானது இன்று பிற்பகல் வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவு.


களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, அகலவத்தை, மத்துகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.


இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொட, அயகம, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.


மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மலைச்சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் மற்றும் மண் சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.


பலத்த காற்றுடன் கனமழை; ஆபத்தை உணர்ந்தால் வெளியேறுமாறு எச்சரிக்கை நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கையானது இன்று பிற்பகல் வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவு.களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, அகலவத்தை, மத்துகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொட, அயகம, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மலைச்சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் மற்றும் மண் சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement