• Sep 06 2026

பலத்த மின்னலுடன் கனமழை; 4 பகுதிகளுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

Chithra / Sep 5th 2026, 3:23 pm
image


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (05) இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன், சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பலத்த மின்னலுடன் கனமழை; 4 பகுதிகளுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (05) இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement