• Sep 18 2026

நீண்டகால வரட்சிக்கு பின்னர் பெய்த கனமழை – மக்கள் நிம்மதி

Aathira / Sep 17th 2026, 8:11 am
image

நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில்  நேற்று (16)மாலை கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.

முள்ளிப்பொத்தானை,தம்பலகாமம் உள்ளிட்ட பல இடங்களிலும் சுமார் இரு மணித்தியாலங்கள் வரை மழை பெய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால் குடிநீர் பற்றாக்குறை, கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைதல், விவசாயப் பயிர்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

குறிப்பாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், தற்போது பெய்துள்ள கனமழை அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மழையினால் வறண்ட நிலையில் காணப்பட்ட குளங்கள், நீர்நிலைகள் மற்றும் வயல் நிலங்களில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீண்டகால வரட்சியின் பின்னர் கிடைத்துள்ள இந்த மழை தொடர்ச்சியாக கிடைத்தால் விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கவும் முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நீண்டகால வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தொடர்ந்தும் போதிய மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நீண்டகால வரட்சிக்கு பின்னர் பெய்த கனமழை – மக்கள் நிம்மதி நீண்டகாலமாக நிலவிய எல் நினோ கால நிலையின் தாக்கம் காரணமாக கடும் வரட்சிக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில்  நேற்று (16)மாலை கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் பெரும் ஆறுதல் அடைந்துள்ளனர்.முள்ளிப்பொத்தானை,தம்பலகாமம் உள்ளிட்ட பல இடங்களிலும் சுமார் இரு மணித்தியாலங்கள் வரை மழை பெய்துள்ளது.கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் வெப்பம் மற்றும் மழையின்மையால் குடிநீர் பற்றாக்குறை, கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் குறைதல், விவசாயப் பயிர்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.குறிப்பாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், தற்போது பெய்துள்ள கனமழை அவர்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.மழையினால் வறண்ட நிலையில் காணப்பட்ட குளங்கள், நீர்நிலைகள் மற்றும் வயல் நிலங்களில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.நீண்டகால வரட்சியின் பின்னர் கிடைத்துள்ள இந்த மழை தொடர்ச்சியாக கிடைத்தால் விவசாய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான நீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கவும் முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் நீண்டகால வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தொடர்ந்தும் போதிய மழை பெய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement