கந்தளாய் பகுதியில் (24) நேற்று இரவு 7.00 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கந்தளாய் சிபெட்கோ (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மித்த மூன்று மூலைச் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியிலிருந்து 91-ஆம் கட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், 91-ஆம் கட்டைப் பகுதியிலிருந்து மணிக்கூட்டுக் கோபுரப் பகுதி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடனும், மற்றையவர் சாதாரண காயங்களுடனும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் தன்மை மற்றும் மழையுடன் கூடிய வானிலை ஆகியன இவ்விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தளாயில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து கந்தளாய் பகுதியில் (24) நேற்று இரவு 7.00 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கந்தளாய் சிபெட்கோ (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மித்த மூன்று மூலைச் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியிலிருந்து 91-ஆம் கட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், 91-ஆம் கட்டைப் பகுதியிலிருந்து மணிக்கூட்டுக் கோபுரப் பகுதி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.இவ்விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடனும், மற்றையவர் சாதாரண காயங்களுடனும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் தன்மை மற்றும் மழையுடன் கூடிய வானிலை ஆகியன இவ்விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.