அம்பேபுஸ்ஸ கபுலாவ பகுதியில் உள்ள யத்தல்கொட மா ஓயாவின் கரையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெடிக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மீரிகம பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மா ஓயாவில் குளிக்க சென்ற ஒருவர் நேற்று மாலை மீரிகம பொலிஸ் பிரிவுக்கு மா ஓயாவின் கரையில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் மீரிகம பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த கைக்குண்டு சமீபத்திய வெள்ளத்தின்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கரையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அல்லது, யாராவது அதைக் கொண்டு வந்து வீசினார்களா என்பது குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
மா ஓயாவின் கரையில் கைக்குண்டு மீட்பு - வெடிக்கச் செய்ய நடவடிக்கை அம்பேபுஸ்ஸ கபுலாவ பகுதியில் உள்ள யத்தல்கொட மா ஓயாவின் கரையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை, நீதிமன்ற உத்தரவின் பேரில் வெடிக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மீரிகம பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.மா ஓயாவில் குளிக்க சென்ற ஒருவர் நேற்று மாலை மீரிகம பொலிஸ் பிரிவுக்கு மா ஓயாவின் கரையில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் மீரிகம பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த கைக்குண்டு சமீபத்திய வெள்ளத்தின்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கரையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.அல்லது, யாராவது அதைக் கொண்டு வந்து வீசினார்களா என்பது குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.