• Sep 29 2026

அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குக.! - தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசர கோரிக்கை

Aathira / Sep 28th 2026, 7:26 pm
image

சவூதி அரேபியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசரமானதும் மனிதாபிமானமானதுமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு முக்கிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் இரா.சாணக்கியன் எம்.பி. இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"இலங்கையின் தேசிய மற்றும் சமூக ஊடகச் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் மூலங்களின் ஊடாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அனோஜனுக்கு எதிரான ஆரம்ப தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், 

அவரது முன்னைய தண்டனையை அதிகரித்ததன் பின்னர் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மதத்தை அவமதித்ததாகக் கூறப்பட்ட குற்றத்திற்காகக் கீழ்நீதிமன்றத்தினால் முதலில் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

சவூதி அரேபிய இராச்சியத்தின் உயர்ந்த நீதிமன்றத்தில் இறுதி மேன்முறையீட்டை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்கின்றோம். 

எனினும், அவ்வாறான மேன்முறையீட்டை முன்னெடுப்பதற்கு மிகப்பெரிய சட்டச் செலவுகள் தேவைப்படுவதால், இலங்கையில் மிகவும் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த, வெளிநாட்டில் தொழிலாளியாகப் பணியாற்றிய அனோஜனின் குடும்பத்தினரால் அந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்வது முற்றிலும் இயலாத காரியமாகும்.

இந்த வழக்கு தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் முன்னிலையிலும் இலங்கை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோருகின்றோம்.

குறிப்பாக, குற்றமாகக் கூறப்படும் சம்பவத்தின் தன்மை, இதுவரை முன்னெடுக்கப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள், அத்துடன் அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பான தெளிவான தகவல்களை அரசு  வழங்க வேண்டும்.

அனோஜன் நிரபராதி என்பதிலும், அவர் தொடர்ந்து சமாதானத்தை ஆதரிக்கும் தன்மையுடனும் நடத்தையுடனும் இருந்தவர் என்பதிலும் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. 

தனது குடும்பத்தினரிடமிருந்தும் சமூகத்தினரிடமிருந்தும் தொலைவில் வெளிநாட்டில் தொழிலாளியாக வாழ்ந்துவரும் நிலையில், இணையத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத ஒரு சூழ்நிலைக்கு அவர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றியிருக்கலாம்.

குறிப்பாக, பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட கருத்தை அனோஜன் உடனடியாக மீளப்பெற்று, அதனை நீக்கியதுடன், அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார். இஸ்லாம் மதத்தை அவமதிக்க வேண்டும் அல்லது புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வாறான கருத்தை வெளியிடுவது அவரது இயல்பான குணாதிசயமல்ல.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவையும் நல்லுறவையும் இந்தக் கோரிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கையின் அபிவிருத்திக்குச் சவூதி அரேபியா வழங்கிவரும் உதவிகளை இலங்கை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். 

அத்துடன், இஸ்லாமிய உலகில் சவூதி அரேபியா வகிக்கும் முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு, தங்களது இந்த வேண்டுகோளை சவூதி அரேபிய இராச்சியம் அனுதாபத்துடனும் மனிதாபிமானத்துடனும் பரிசீலிக்கும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே, அனோஜனுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்காமல் அவரது உயிரைக் காப்பாற்றுமாறும், சவூதி அரேபியா அரசு அவருக்கு அரச மன்னிப்பை வழங்குமாறும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

இந்தக் கோரிக்கைக்கான பிரதி, இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும், கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பதில் பொறுப்பாளருக்கும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." - என்றுள்ளது.

அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குக. - தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசர கோரிக்கை சவூதி அரேபியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசரமானதும் மனிதாபிமானமானதுமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு முக்கிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் இரா.சாணக்கியன் எம்.பி. இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-"இலங்கையின் தேசிய மற்றும் சமூக ஊடகச் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல் மூலங்களின் ஊடாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அனோஜனுக்கு எதிரான ஆரம்ப தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது முன்னைய தண்டனையை அதிகரித்ததன் பின்னர் தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மதத்தை அவமதித்ததாகக் கூறப்பட்ட குற்றத்திற்காகக் கீழ்நீதிமன்றத்தினால் முதலில் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.சவூதி அரேபிய இராச்சியத்தின் உயர்ந்த நீதிமன்றத்தில் இறுதி மேன்முறையீட்டை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக நாங்கள் புரிந்துகொள்கின்றோம். எனினும், அவ்வாறான மேன்முறையீட்டை முன்னெடுப்பதற்கு மிகப்பெரிய சட்டச் செலவுகள் தேவைப்படுவதால், இலங்கையில் மிகவும் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த, வெளிநாட்டில் தொழிலாளியாகப் பணியாற்றிய அனோஜனின் குடும்பத்தினரால் அந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்வது முற்றிலும் இயலாத காரியமாகும்.இந்த வழக்கு தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் முன்னிலையிலும் இலங்கை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோருகின்றோம்.குறிப்பாக, குற்றமாகக் கூறப்படும் சம்பவத்தின் தன்மை, இதுவரை முன்னெடுக்கப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள், அத்துடன் அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பான தெளிவான தகவல்களை அரசு  வழங்க வேண்டும்.அனோஜன் நிரபராதி என்பதிலும், அவர் தொடர்ந்து சமாதானத்தை ஆதரிக்கும் தன்மையுடனும் நடத்தையுடனும் இருந்தவர் என்பதிலும் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. தனது குடும்பத்தினரிடமிருந்தும் சமூகத்தினரிடமிருந்தும் தொலைவில் வெளிநாட்டில் தொழிலாளியாக வாழ்ந்துவரும் நிலையில், இணையத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத ஒரு சூழ்நிலைக்கு அவர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றியிருக்கலாம்.குறிப்பாக, பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட கருத்தை அனோஜன் உடனடியாக மீளப்பெற்று, அதனை நீக்கியதுடன், அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார். இஸ்லாம் மதத்தை அவமதிக்க வேண்டும் அல்லது புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வாறான கருத்தை வெளியிடுவது அவரது இயல்பான குணாதிசயமல்ல.இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவையும் நல்லுறவையும் இந்தக் கோரிக்கை சுட்டிக்காட்டுகின்றது.இலங்கையின் அபிவிருத்திக்குச் சவூதி அரேபியா வழங்கிவரும் உதவிகளை இலங்கை மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். அத்துடன், இஸ்லாமிய உலகில் சவூதி அரேபியா வகிக்கும் முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு, தங்களது இந்த வேண்டுகோளை சவூதி அரேபிய இராச்சியம் அனுதாபத்துடனும் மனிதாபிமானத்துடனும் பரிசீலிக்கும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.எனவே, அனோஜனுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்காமல் அவரது உயிரைக் காப்பாற்றுமாறும், சவூதி அரேபியா அரசு அவருக்கு அரச மன்னிப்பை வழங்குமாறும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.இந்தக் கோரிக்கைக்கான பிரதி, இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும், கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பதில் பொறுப்பாளருக்கும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement