காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தோழியின் வீட்டில் 9 சவரன் தங்க நகைகளைத் திருடியதாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருடிய நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடையில் சுமார் ரூ.2.5 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.
அந்தப் பணத்தில் மக்கினாம்பட்டியைச் சேர்ந்த தனது காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்..
இதையடுத்து மாணவி மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பொள்ளாச்சி ஜேஎம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அவரது காதலனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
காதலனுக்காக தோழி வீட்டிலே திருடிய காதலி - 9 பவுன் நகையை திருடி காதலனுக்கு சப்ரைஸ் காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தோழியின் வீட்டில் 9 சவரன் தங்க நகைகளைத் திருடியதாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது தந்தையின் நண்பரான தமிழ்ச்செல்வன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருடிய நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடையில் சுமார் ரூ.2.5 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.அந்தப் பணத்தில் மக்கினாம்பட்டியைச் சேர்ந்த தனது காதலனுக்கு இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து மாணவி மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பொள்ளாச்சி ஜேஎம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அவரது காதலனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.