யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, பல்வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களால் நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, நாவாந்துறை ஊடான பேருந்து சேவையை முன்னெடுத்தல், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூட வசதிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், பாசையூர் மீனவர்களுக்கான எரிபொருள் விற்பனை நிலையத்தை அமைத்தல், நாவாந்துறை மக்களின் அபிவிருத்தித் தேவைகளுக்காக காணி உரித்தாவணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதேச மட்டத்தில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை உரிய முறையில் அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதேச மட்டத்தில் மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, அவற்றின் பயன்கள் நேரடியாக மக்களை சென்றடைவதை உறுதி செய்வதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
நாவாந்துறை பேருந்து சேவை முதல் சுகாதாரம் வரை: யாழ்ப்பாணத்தில் முக்கிய முடிவுகள் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.இதன்போது, பல்வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களால் நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.குறிப்பாக, நாவாந்துறை ஊடான பேருந்து சேவையை முன்னெடுத்தல், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூட வசதிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், பாசையூர் மீனவர்களுக்கான எரிபொருள் விற்பனை நிலையத்தை அமைத்தல், நாவாந்துறை மக்களின் அபிவிருத்தித் தேவைகளுக்காக காணி உரித்தாவணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதேச மட்டத்தில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை உரிய முறையில் அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.மேலும், பிரதேச மட்டத்தில் மக்களின் பங்களிப்புடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, அவற்றின் பயன்கள் நேரடியாக மக்களை சென்றடைவதை உறுதி செய்வதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.