• May 19 2026

மின்சார சபையின் தன்னார்வ ஓய்வுக்காலத் திட்டத்தில் இழுபறி: 2,200 ஊழியர்கள் பாதிப்பு

Chithra / Dec 23rd 2025, 10:38 am
image

 இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வ ஓய்வுக்காலத் திட்டத்திற்கு விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அத்திட்டம் தொடர்ச்சியாக தாமதமாவதால் மிகுந்த கவலையும் நிச்சயமற்ற தன்மையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

 

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இது தொடர்பாக வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

 

அதில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகபூர்வ திகதியை உடனடியாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 

 

இந்த இழுபறி நிலை தங்களின் எதிர்காலத் திட்டங்களைச் சீர்குலைத்துள்ளதோடு, கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். 

 

ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாற்று வேலைவாய்ப்புகள், சுயதொழில் முயற்சிகள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கு ஊழியர்கள் ஏற்கனவே தயாராகியுள்ளனர். 

 

ஆனால் முறையான திகதி அறிவிக்கப்படாததால் அவர்கள் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். 

 

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, துணை நிறுவனங்களுடன் இனி இணைந்திருக்கப் போவதில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே இவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். 

  

அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஓய்வுக்கால முயற்சிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ள அதேவேளை, சில தரப்பினரின் சதி நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நடைமுறை தாமதமாவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மின்சார சபையின் தன்னார்வ ஓய்வுக்காலத் திட்டத்தில் இழுபறி: 2,200 ஊழியர்கள் பாதிப்பு  இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வ ஓய்வுக்காலத் திட்டத்திற்கு விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அத்திட்டம் தொடர்ச்சியாக தாமதமாவதால் மிகுந்த கவலையும் நிச்சயமற்ற தன்மையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இது தொடர்பாக வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.  அதில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகபூர்வ திகதியை உடனடியாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.  இந்த இழுபறி நிலை தங்களின் எதிர்காலத் திட்டங்களைச் சீர்குலைத்துள்ளதோடு, கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.  ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாற்று வேலைவாய்ப்புகள், சுயதொழில் முயற்சிகள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கு ஊழியர்கள் ஏற்கனவே தயாராகியுள்ளனர்.  ஆனால் முறையான திகதி அறிவிக்கப்படாததால் அவர்கள் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.  இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, துணை நிறுவனங்களுடன் இனி இணைந்திருக்கப் போவதில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே இவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.   அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஓய்வுக்கால முயற்சிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ள அதேவேளை, சில தரப்பினரின் சதி நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நடைமுறை தாமதமாவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement