• May 15 2026

கந்தளாயில் பயனாளிகளுக்கு வீடமைப்பு நிதியுதவி: காசோலைகள் வழங்கி வைப்பு!

Ziya / May 14th 2026, 12:20 pm
image

சொந்தமான ஓர் இடம், அழகான வாழ்க்கை" எனும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (13) கந்தளாய் பேராறு பகுதியில் நடைபெற்றது.


திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 110 பயனாளிகளுக்கு, 2026 ஆம் ஆண்டிற்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.


இன்றைய நிகழ்வில் மேலும் 10 பயனாளிகளுக்குத் தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


காசோலைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.


வீடற்ற குடும்பங்களின் கனவை நனவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த "சொந்தமான ஓர் இடம், அழகான வாழ்க்கை" திட்டத்தின் மூலம், திருகோணமலை மாவட்டத்தின் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கந்தளாயில் பயனாளிகளுக்கு வீடமைப்பு நிதியுதவி: காசோலைகள் வழங்கி வைப்பு சொந்தமான ஓர் இடம், அழகான வாழ்க்கை" எனும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (13) கந்தளாய் பேராறு பகுதியில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 110 பயனாளிகளுக்கு, 2026 ஆம் ஆண்டிற்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.இன்றைய நிகழ்வில் மேலும் 10 பயனாளிகளுக்குத் தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.காசோலைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.வீடற்ற குடும்பங்களின் கனவை நனவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த "சொந்தமான ஓர் இடம், அழகான வாழ்க்கை" திட்டத்தின் மூலம், திருகோணமலை மாவட்டத்தின் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement