விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த, புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 21 வயதுடைய நடராசா விஸ்னுயன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நால்வரை பலியெடுத்த கோர விபத்து; மற்றுமொரு இளைஞனும் உயிரிழப்பு விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.இந்த விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த, புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர்.குறித்த விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த 21 வயதுடைய நடராசா விஸ்னுயன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.