போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி –பளை பகுதியில் அமைந்துள்ள தம்பகாமம் நெளியாய் அம்மன் கோவில் வீதியை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று01.01.2026 இடம்பெற்றது.
இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இந்த வீதியை புனரமைத்து தருமாறு இந்த பகுதி மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் ஊடாக இவ்வீதி அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீதி புனரமைப்புத் திட்டம் நிறைவேறுவதன் மூலம், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பளை தம்பலகாமம் பகுதியில் கிராமிய வீதி புனரமைப்பிற்கு அடிக்கல் நடுகை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி – பளை பகுதியில் அமைந்துள்ள தம்பகாமம் நெளியாய் அம்மன் கோவில் வீதியை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று01.01.2026 இடம்பெற்றது.இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இந்த வீதியை புனரமைத்து தருமாறு இந்த பகுதி மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் ஊடாக இவ்வீதி அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வீதி புனரமைப்புத் திட்டம் நிறைவேறுவதன் மூலம், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.