புலம்பெயர் தமிழர்களின் தாயகக் கனவுகளை நனவாக்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் “அல்லை விலாஸ்” என்ற நவீன குடியிருப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தாயகத்திற்கு வருகை தரும் போது பாதுகாப்பான, வசதியான மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய குடியிருப்பு வசதியை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிர்வாகக் குழுவில் கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தொழிலதிபர்கள் இணைந்துள்ளனர்.
அவர்களுடன் வடமாகாண ஏற்றுமதி சம்மேளனத்தின் தலைவர் சுகந்தன் சண்முகநாதனும் இயக்குநராக இணைந்துள்ளார்.
யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலும், நல்லூரிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள அல்லைப்பிட்டி, அமைதியான இயற்கைச் சூழலுக்குப் பெயர் பெற்ற பகுதியாகும். பறவைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, வருடம் முழுவதும் காற்றோட்டமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்விடமாக விளங்குகிறது.
“அல்லை விலாஸ்” திட்டத்தின் கீழ் மொத்தம் 72 குடியிருப்பு அலகுகள் அமைக்கப்படுகின்றன.
பாரம்பரிய தமிழ் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட வீடுகள் மற்றும் நவீன வடிவமைப்பில் உருவாக்கப்படும் வீடுகள் என நான்கு வகை வீட்டு மாதிரிகள் இதில் இடம்பெறுகின்றன.
பாதுகாப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 24 மணி நேர பாதுகாப்பு, பல்வேறு பாதுகாப்பு மையங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பறவைகள் சரணாலயத்தை நேரடியாகக் காணும் வசதியுடன் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
குடியிருப்பாளர்களுக்காக ஐந்து நட்சத்திர தரத்திலான உணவகம், நீச்சல் தடாகம், டென்னிஸ் மைதானம், மருத்துவர் சேவை, லாண்டரி வசதி, ஆட்டோ சேவை மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் முதலீடு செய்யும் வகையில், அவர்கள் இல்லாத காலங்களில் வீடுகளை குறுகிய கால வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டும் சொத்து மேலாண்மை (Property Management) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களது சொத்திலிருந்து தொடர்ச்சியான வருமானத்தைப் பெற முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் பெயரில் நேரடியாக சொத்துகளைப் பதிவு செய்ய முடியும். அதேவேளை, இரட்டை குடியுரிமை இல்லாதவர்களுக்கு 999 ஆண்டுகள் கால லீஸ் அடிப்படையிலான உரிமை வழங்கப்படுவதுடன், பின்னர் சட்ட ரீதியான மாற்றங்களின் மூலம் முழுமையான உரிமையையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் தொழிலதிபர்களின் முயற்சியால் உருவான இந்தத் திட்டம், புலம்பெயர் சமூகத்திற்கும் தாயகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற இலங்கை, சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவில் உள்ள பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாழில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் புதிய கனவு நகரம்- எங்கே தெரியுமா https://www.youtube.com/watchv=jy3Mv-avFcUபுலம்பெயர் தமிழர்களின் தாயகக் கனவுகளை நனவாக்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் “அல்லை விலாஸ்” என்ற நவீன குடியிருப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தாயகத்திற்கு வருகை தரும் போது பாதுகாப்பான, வசதியான மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய குடியிருப்பு வசதியை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிர்வாகக் குழுவில் கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தொழிலதிபர்கள் இணைந்துள்ளனர். அவர்களுடன் வடமாகாண ஏற்றுமதி சம்மேளனத்தின் தலைவர் சுகந்தன் சண்முகநாதனும் இயக்குநராக இணைந்துள்ளார்.யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலும், நல்லூரிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள அல்லைப்பிட்டி, அமைதியான இயற்கைச் சூழலுக்குப் பெயர் பெற்ற பகுதியாகும். பறவைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, வருடம் முழுவதும் காற்றோட்டமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்விடமாக விளங்குகிறது.“அல்லை விலாஸ்” திட்டத்தின் கீழ் மொத்தம் 72 குடியிருப்பு அலகுகள் அமைக்கப்படுகின்றன. பாரம்பரிய தமிழ் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட வீடுகள் மற்றும் நவீன வடிவமைப்பில் உருவாக்கப்படும் வீடுகள் என நான்கு வகை வீட்டு மாதிரிகள் இதில் இடம்பெறுகின்றன.பாதுகாப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 24 மணி நேர பாதுகாப்பு, பல்வேறு பாதுகாப்பு மையங்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், பறவைகள் சரணாலயத்தை நேரடியாகக் காணும் வசதியுடன் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.குடியிருப்பாளர்களுக்காக ஐந்து நட்சத்திர தரத்திலான உணவகம், நீச்சல் தடாகம், டென்னிஸ் மைதானம், மருத்துவர் சேவை, லாண்டரி வசதி, ஆட்டோ சேவை மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.வெளிநாடுகளில் வசிப்பவர்கள் முதலீடு செய்யும் வகையில், அவர்கள் இல்லாத காலங்களில் வீடுகளை குறுகிய கால வாடகைக்கு வழங்கி வருமானம் ஈட்டும் சொத்து மேலாண்மை (Property Management) திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களது சொத்திலிருந்து தொடர்ச்சியான வருமானத்தைப் பெற முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் பெயரில் நேரடியாக சொத்துகளைப் பதிவு செய்ய முடியும். அதேவேளை, இரட்டை குடியுரிமை இல்லாதவர்களுக்கு 999 ஆண்டுகள் கால லீஸ் அடிப்படையிலான உரிமை வழங்கப்படுவதுடன், பின்னர் சட்ட ரீதியான மாற்றங்களின் மூலம் முழுமையான உரிமையையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் தொழிலதிபர்களின் முயற்சியால் உருவான இந்தத் திட்டம், புலம்பெயர் சமூகத்திற்கும் தாயகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற இலங்கை, சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவில் உள்ள பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.