• Jun 18 2026

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் ஆரம்பம்!

shanu / Jun 17th 2026, 5:40 pm
image

வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


​மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (Telecom) அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவது, கல்வி பயிலும் போதே வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல், தங்குமிட வசதிகள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.


​மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போது தனது சேவையை மன்னார் மாவட்டத்திலும் விரிவுபடுத்தியுள்ளது.


குறித்த  நிகழ்வில் நிறுவனத்தின் இயக்குனர் மொலினி ஹரீந்திரன், மதக் குருமார்கள், பணியாளர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


​வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு இந்த மையம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் ஆரம்பம் வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.​மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (Telecom) அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவது, கல்வி பயிலும் போதே வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுதல், தங்குமிட வசதிகள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.​மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போது தனது சேவையை மன்னார் மாவட்டத்திலும் விரிவுபடுத்தியுள்ளது.குறித்த  நிகழ்வில் நிறுவனத்தின் இயக்குனர் மொலினி ஹரீந்திரன், மதக் குருமார்கள், பணியாளர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.​வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு இந்த மையம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement