• Sep 29 2026

நெடுந்தீவில் பரவும் கால்வாய் நோய் – கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

Chithra / Sep 29th 2026, 3:29 pm
image


நெடுந்தீவு பிரதேசத்தில் கால்நடைகளுக்கு கால்வாய் நோய் கண்டறியப்பட்டுள்ளதால், கால்நடை வளர்ப்போர் அவதானத்துடன் செயற்படுமாறு நெடுந்தீவு கால்நடை வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


நெடுந்தீவு பிரதேசத்தில் தற்போது கால்வாய் நோய் (Foot-and-Mouth Disease) இனங்காணப்பட்டுள்ள நிலையில், கால்நடைகளின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளின் வாய் மற்றும் கால்களின் குளம்புகளுக்கு இடையில் புண்கள் தென்பட்டால், கால்நடை வளர்ப்போர் தாமதமின்றி அது தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அத்துடன், நோய் இனங்காணப்படும் கால்நடைகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கால்நடை வளர்ப்போர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நெடுந்தீவு கால்நடை வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


கால்நடைகளில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதன் மூலம், நோய் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் பரவும் கால்வாய் நோய் – கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை நெடுந்தீவு பிரதேசத்தில் கால்நடைகளுக்கு கால்வாய் நோய் கண்டறியப்பட்டுள்ளதால், கால்நடை வளர்ப்போர் அவதானத்துடன் செயற்படுமாறு நெடுந்தீவு கால்நடை வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.நெடுந்தீவு பிரதேசத்தில் தற்போது கால்வாய் நோய் (Foot-and-Mouth Disease) இனங்காணப்பட்டுள்ள நிலையில், கால்நடைகளின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளின் வாய் மற்றும் கால்களின் குளம்புகளுக்கு இடையில் புண்கள் தென்பட்டால், கால்நடை வளர்ப்போர் தாமதமின்றி அது தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், நோய் இனங்காணப்படும் கால்நடைகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கால்நடை வளர்ப்போர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நெடுந்தீவு கால்நடை வைத்திய அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.கால்நடைகளில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதன் மூலம், நோய் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement