மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள மூலம் சந்தேகிக்கப்படுகின்றது.
விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் வங்கி ஒன்றில் தீப்பரவல் - அதிகாலையில் பதற்றம் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது.வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள மூலம் சந்தேகிக்கப்படுகின்றது. விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.