• May 12 2026

அமெரிக்காவில் கொழுந்து விட்டு எரியும் தீ- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் விபத்து!

Ziya / May 12th 2026, 12:35 pm
image

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம், மேற்கு துல்சாவில் (West Tulsa) அமைந்துள்ள ஹெச்.எஃப். சின்க்ளேர் (HF Sinclair) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.


ஹெச்.எஃப். சின்க்ளேர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் திடீரெனத் தீப்பிடித்தது. 


இதன் கூடுதல் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன, அதில் கரும்புகை வானத்தை முட்டுமளவிற்கு எழுவதைக் காண முடிகிறது.


துல்சா தீயணைப்புத் துறையினர் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரத்யேகப் பாதுகாப்புக் குழுவினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஊழியர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.


தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா அல்லது பாதுகாப்பு விதிமீறலா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் கொழுந்து விட்டு எரியும் தீ- எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் விபத்து அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம், மேற்கு துல்சாவில் (West Tulsa) அமைந்துள்ள ஹெச்.எஃப். சின்க்ளேர் (HF Sinclair) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர்.ஹெச்.எஃப். சின்க்ளேர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் திடீரெனத் தீப்பிடித்தது. இதன் கூடுதல் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன, அதில் கரும்புகை வானத்தை முட்டுமளவிற்கு எழுவதைக் காண முடிகிறது.துல்சா தீயணைப்புத் துறையினர் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரத்யேகப் பாதுகாப்புக் குழுவினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஊழியர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா அல்லது பாதுகாப்பு விதிமீறலா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement