• May 09 2026

யாழ். போதனா வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து

Aathira / May 9th 2026, 7:53 am
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (மே 9) சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் என பல தரப்பினரும் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


யாழ். போதனா வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (மே 9) சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தீயை அணைக்க யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் என பல தரப்பினரும் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement