• May 01 2026

நிதியமைச்சின் உதவிப்பணிப்பாளர் மர்ம மரணம் - விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்

Chithra / May 1st 2026, 12:17 pm
image

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.


குறித்த இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு பிரதம பொலிஸ் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன.

 

ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது.


ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. 

நிதியமைச்சின் உதவிப்பணிப்பாளர் மர்ம மரணம் - விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.குறித்த இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு பிரதம பொலிஸ் ஆய்வாளர்களின் மேற்பார்வையின் கீழ் களமிறக்கப்பட்டுள்ளன. ரங்க ராஜபக்சவின் உடலம் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுத் தோட்டத்தின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது.ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நேற்று (30) முற்பகல் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றதாகவும், பிற்பகல் 2.00 மணியளவில் அவரது உடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.இதேவேளை திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ரங்க ராஜபக்சவிடம் மூன்று முறை வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement