மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி புரிந்த நெடியமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு தலையில் வெட்டுக் காயம் காணப்படுவதாகவும், இது கொலை சம்பவமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
இன்று (25) திங்கட்கிழமை காலை ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
வயல் காவலாளி கொடூரமாக வெட்டிக் கொலை - மட்டக்களப்பில் பயங்கரம் மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி புரிந்த நெடியமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபருக்கு தலையில் வெட்டுக் காயம் காணப்படுவதாகவும், இது கொலை சம்பவமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்இன்று (25) திங்கட்கிழமை காலை ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.