நாட்டின் பல பகுதிகளிலிருந்து மூளைக்காய்ச்சல் அறிகுறியுடைய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தத்தமது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் குறித்துச் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
முதலில் தெனியாய பகுதியிலேயே இந்த நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். எனினும், தற்போது ரிபில்லகஸ்கட, தியத்தலாவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போதைய நோயாளர்களிடமிருந்து புதிய நபர்களுக்கு நோய் பரவுகிறதா அல்லது புதிய நோயாளர்கள் எவராவது இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இது மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் காட்டும் ஒரு வகையான இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் என மருத்துவர் ஹன்சக விஜேமுனி விளக்கியுள்ளார்.
இந்த வைரஸ் நோய் தொடர்பான களவாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் இது குறித்துத் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்தநோய் ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல், கழுத்து விறைப்பு, சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை ஆகியவைகளைக் குறிப்பிடலாம். இதேவேளை அணுக்கமான தொடர்பு (Close contact), அசுத்தமான குடிநீர் மற்றும் நேரடி உடல் ரீதியான தொடர்பு மூலம் இந்தநோய் பரவக்கூடும்.
இந்தநோய் பரவுவதைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பான குடிநீரை மாத்திரம் அருந்துதல், முகக்கவசங்களை முறையாக அணிந்து முகத்தை மூடிக்கொள்ளுதல், மக்கள் நெரிசல்மிக்க பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மூளைக்காய்ச்சல் அறிகுறியுடைய காய்ச்சல் பரவல் - சுகாதார அமைச்சு அவசர எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளிலிருந்து மூளைக்காய்ச்சல் அறிகுறியுடைய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தத்தமது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் குறித்துச் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.முதலில் தெனியாய பகுதியிலேயே இந்த நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். எனினும், தற்போது ரிபில்லகஸ்கட, தியத்தலாவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.தற்போதைய நோயாளர்களிடமிருந்து புதிய நபர்களுக்கு நோய் பரவுகிறதா அல்லது புதிய நோயாளர்கள் எவராவது இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இது மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் காட்டும் ஒரு வகையான இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் என மருத்துவர் ஹன்சக விஜேமுனி விளக்கியுள்ளார்.இந்த வைரஸ் நோய் தொடர்பான களவாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் இது குறித்துத் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.அத்துடன், இந்தநோய் ஏனைய பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.இதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல், கழுத்து விறைப்பு, சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை ஆகியவைகளைக் குறிப்பிடலாம். இதேவேளை அணுக்கமான தொடர்பு (Close contact), அசுத்தமான குடிநீர் மற்றும் நேரடி உடல் ரீதியான தொடர்பு மூலம் இந்தநோய் பரவக்கூடும்.இந்தநோய் பரவுவதைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பான குடிநீரை மாத்திரம் அருந்துதல், முகக்கவசங்களை முறையாக அணிந்து முகத்தை மூடிக்கொள்ளுதல், மக்கள் நெரிசல்மிக்க பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.