• May 21 2026

மருமகனின் தாக்குதலில் பலியான மாமனார்; கிளிநொச்சியில் பயங்கரம்

Chithra / Nov 25th 2025, 3:44 pm
image

 


கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை  இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மருமகன் மகளுடன் சண்டையிட்டபோது,  மகள் தந்தை வீட்டிற்கு தப்பியோடி வந்த நிலையில், மகளை தாக்க முற்பட்ட மருமகனை தடுக்க முற்பட்ட, மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் மருமகன், மருமகனின் சிறிய தந்தை இணைந்து தாக்குதலை நடாத்தி  தலைமறைவாகி இருந்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச பொலிஸாரல் இரவு முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மருமகனின் தாக்குதலில் பலியான மாமனார்; கிளிநொச்சியில் பயங்கரம்  கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை  இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருமகன் மகளுடன் சண்டையிட்டபோது,  மகள் தந்தை வீட்டிற்கு தப்பியோடி வந்த நிலையில், மகளை தாக்க முற்பட்ட மருமகனை தடுக்க முற்பட்ட, மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.56 வயதுடைய கதிரவேலு சிவராசலிங்கம் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவரின் மருமகன், மருமகனின் சிறிய தந்தை இணைந்து தாக்குதலை நடாத்தி  தலைமறைவாகி இருந்துள்ளனர்.பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் இருவரும் அக்கராயன் பிரதேச பொலிஸாரல் இரவு முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement