• May 19 2026

வயலுக்குச் சென்ற விவசாயி ஓடும் நீரில் தவறிவிழுந்து பலி; நிந்தவூரில் துயர சம்பவம்

Aathira / Dec 26th 2025, 9:32 am
image

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் உள்ளாற்றுக்கட்டு பகுதியில் வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர், பாலத்தில் இருந்து தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி நேற்று  உயிரிழந்துள்ளார்.   

இவ்வாறு உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில்  பசளை ஏற்றிக் கொண்டு  வயலுக்குச் செல்லும் வழியில்,  பாலத்தின் ஊடாக பயணித்த போது தவறுதலாக ஆற்றில் பசளை விழுந்ததாகவும், 

அதனை மீட்டெடுக்க  அதிக நீரோட்டம்  கொண்ட ஆற்றிற்குள் இறங்கிய நிலையில்,  அவர்  நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த உள்ளாற்றுக்கட்டு பகுதியில் வான்கதவின் ஊடாக வெள்ள நீர் வெளியேறி வருகின்ற நிலையில் சடலமானது கலிங்கத்தொட்டியில் சிக்கி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

நீரில் மூழ்கி காணாமல் போன உயிரிழந்தவரின் சடலத்தை தேடுவதற்கு அப்பகுதிக்கு நீர்பாசன திணைக்களத்தின் உதவி பெறப்பட்டிருந்தது.

அத்துடன் அப்பகுதிக்கு வருகை தந்த நீர்பாச திணைக்களத்தினர் வான்கதவுகளை மூடி வெள்ள நீரை குறைத்த போது   கலிங்கத்தொட்டியில் சிக்கி   சடலம் உயிரிழந்த நிலையில்  மீட்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

உயிரிழந்தவர் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற உத்தரவால் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் விசாரணை மேற்கொண்டு,  

அவர் நீரில் மூழ்கியமையினால் மூச்சு திணரல் ஏற்பட்டு  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

உயிரிழந்தவர் நிந்தவூர் 06 தெற்கு வீதி பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வயலுக்குச் சென்ற விவசாயி ஓடும் நீரில் தவறிவிழுந்து பலி; நிந்தவூரில் துயர சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் உள்ளாற்றுக்கட்டு பகுதியில் வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர், பாலத்தில் இருந்து தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி நேற்று  உயிரிழந்துள்ளார்.   இவ்வாறு உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில்  பசளை ஏற்றிக் கொண்டு  வயலுக்குச் செல்லும் வழியில்,  பாலத்தின் ஊடாக பயணித்த போது தவறுதலாக ஆற்றில் பசளை விழுந்ததாகவும், அதனை மீட்டெடுக்க  அதிக நீரோட்டம்  கொண்ட ஆற்றிற்குள் இறங்கிய நிலையில்,  அவர்  நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.மேலும் குறித்த உள்ளாற்றுக்கட்டு பகுதியில் வான்கதவின் ஊடாக வெள்ள நீர் வெளியேறி வருகின்ற நிலையில் சடலமானது கலிங்கத்தொட்டியில் சிக்கி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.நீரில் மூழ்கி காணாமல் போன உயிரிழந்தவரின் சடலத்தை தேடுவதற்கு அப்பகுதிக்கு நீர்பாசன திணைக்களத்தின் உதவி பெறப்பட்டிருந்தது.அத்துடன் அப்பகுதிக்கு வருகை தந்த நீர்பாச திணைக்களத்தினர் வான்கதவுகளை மூடி வெள்ள நீரை குறைத்த போது   கலிங்கத்தொட்டியில் சிக்கி   சடலம் உயிரிழந்த நிலையில்  மீட்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.உயிரிழந்தவர் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற உத்தரவால் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் விசாரணை மேற்கொண்டு,  அவர் நீரில் மூழ்கியமையினால் மூச்சு திணரல் ஏற்பட்டு  மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு  சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் நிந்தவூர் 06 தெற்கு வீதி பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement