• May 19 2026

வீதியில் வழிமறித்து கத்திக்குத்து தாக்குதல்! யாழில் குடும்பஸ்தர் பலி

Chithra / Jan 1st 2026, 9:12 pm
image

 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி - வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தவனேசன் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். 


கத்திக்குத்துக்கு இலக்கானவர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவுடைய கணவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 


உயிரிழந்தவரின் வீட்டுக்கு முன்னாள் நின்று ஒருவர் மது போதையில் கூச்சலிட்டுள்ளார்.


இந்நிலையில், சிறிது நேரத்தில் மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி சென்றுவிட்டார் என்று கருதி,  குறித்த கொலையுண்ட நபர், மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளதக்கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வீதியில் வழிமறித்து கத்திக்குத்து தாக்குதல் யாழில் குடும்பஸ்தர் பலி  யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி - வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தவனேசன் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கானவர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவுடைய கணவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் வீட்டுக்கு முன்னாள் நின்று ஒருவர் மது போதையில் கூச்சலிட்டுள்ளார்.இந்நிலையில், சிறிது நேரத்தில் மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி சென்றுவிட்டார் என்று கருதி,  குறித்த கொலையுண்ட நபர், மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளதக்கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement