• May 19 2026

கொட்டித் தீர்க்கும் மழையிலும் 'பேஸ்புக் விருந்து'

Aathira / Dec 13th 2025, 7:58 am
image

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் 'பேஸ்புக் விருந்து' நடத்தப்பட்டதை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்கள் மற்றும் 4 யுவதிகளை கைது செய்துள்ளனர்.

இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதன்படி,  ஐஸ்  போதைப்பொருள் 4134 மி.கி, ஹேஸ் 1875 மி.கி, குஷ் 2769 மி.கி, கொக்கேய்ன் 390 மி.கி, மஷ்ரூம் 804 மி.கி, போதை மாத்திரைகள் 13, சட்டவிரோத சிகரெட்டுகள் 12  ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18-31  வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும்,

கைது செய்யப்பட்ட யுவதிகள் 21-26  வயதுக்குட்பட்ட, கண்டி, நீர்கொழும்பு, பூண்டுலோயா இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் தொடர்கின்றனர்.

கொட்டித் தீர்க்கும் மழையிலும் 'பேஸ்புக் விருந்து' தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் 'பேஸ்புக் விருந்து' நடத்தப்பட்டதை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்கள் மற்றும் 4 யுவதிகளை கைது செய்துள்ளனர்.இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி,  ஐஸ்  போதைப்பொருள் 4134 மி.கி, ஹேஸ் 1875 மி.கி, குஷ் 2769 மி.கி, கொக்கேய்ன் 390 மி.கி, மஷ்ரூம் 804 மி.கி, போதை மாத்திரைகள் 13, சட்டவிரோத சிகரெட்டுகள் 12  ஆகியவை கைப்பற்றப்பட்டன.இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18-31  வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைது செய்யப்பட்ட யுவதிகள் 21-26  வயதுக்குட்பட்ட, கண்டி, நீர்கொழும்பு, பூண்டுலோயா இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் தொடர்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement