• Jul 23 2026

வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள் -ஈரானில் அடுத்த கட்ட வேட்டையை நடாத்திய அமெரிக்கா !

Ziya / Jul 23rd 2026, 9:26 am
image

ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அமெரிக்க விமானப்படைகள், ஈரானின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடர்பான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மத்திய கிழக்கில் ஏற்கனவே அதிகரித்துள்ள பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவத்திற்குப் பின்னரே அமெரிக்கா ஈரானிய இராணுவ இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கை பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள், எண்ணெய் போக்குவரத்து மற்றும் கடல் வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனவும் சர்வதேச அளவில் கவலை எழுந்துள்ளது.

வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள் -ஈரானில் அடுத்த கட்ட வேட்டையை நடாத்திய அமெரிக்கா ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க விமானப்படைகள், ஈரானின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடர்பான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மத்திய கிழக்கில் ஏற்கனவே அதிகரித்துள்ள பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னரே அமெரிக்கா ஈரானிய இராணுவ இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கை பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள், எண்ணெய் போக்குவரத்து மற்றும் கடல் வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் எனவும் சர்வதேச அளவில் கவலை எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement