ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை அரசாங்கம் 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் எரிபொருள் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தந்திரோபாய நடவடிக்கையாகும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முச்சக்கர வண்டி கட்டணங்களை முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்க முடியாது எனவும், முச்சக்கர வண்டி கட்டணங்களை முறைப்படுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமே இருப்பதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளதாகவும் ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டண முறைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டணத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்ட பின்னரே அது சட்டமாக அமுலுக்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, புதிய சட்டபூர்வ கட்டணம் அமுல்படுத்தப்படும் வரை பழைய கட்டண முறையே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 90 ரூபாயும் என்ற அடிப்படையில் கட்டணம் தொடர்ந்தும் அறவிடப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நடைமுறையில் பொது வீதிகளில் முச்சக்கர வண்டி பயணங்களுக்கு 110 முதல் 120 ரூபாய் வரையிலான கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி கட்டணங்களுக்கான புதிய முறைமை விரைவில் சட்டபூர்வமாக அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை - வெளியான தகவல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை அரசாங்கம் 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.ஒருபுறம் பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் எரிபொருள் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தந்திரோபாய நடவடிக்கையாகும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.முச்சக்கர வண்டி கட்டணங்களை முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்க முடியாது எனவும், முச்சக்கர வண்டி கட்டணங்களை முறைப்படுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமே இருப்பதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளதாகவும் ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.மேலும், கட்டண முறைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த கட்டணத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்ட பின்னரே அது சட்டமாக அமுலுக்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கமைய, புதிய சட்டபூர்வ கட்டணம் அமுல்படுத்தப்படும் வரை பழைய கட்டண முறையே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 90 ரூபாயும் என்ற அடிப்படையில் கட்டணம் தொடர்ந்தும் அறவிடப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், நடைமுறையில் பொது வீதிகளில் முச்சக்கர வண்டி பயணங்களுக்கு 110 முதல் 120 ரூபாய் வரையிலான கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முச்சக்கர வண்டி கட்டணங்களுக்கான புதிய முறைமை விரைவில் சட்டபூர்வமாக அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.