வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களின் நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) உடன் தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது, இஸ்ரேலில் உள்ள 29,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்துக் கேட்டறிந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மோதல்களைத் தவிர்த்து, பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இஸ்ரேலில் உள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி: இஸ்ரேலிய, ஈரானிய அமைச்சர்களுடன் விஜித ஹேரத் உரையாடல் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000 இலங்கையர்களின் நலம் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்."வெளிநாடுகளில் உள்ள நமது குடிமக்களைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இன்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) உடன் தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது, இஸ்ரேலில் உள்ள 29,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்துக் கேட்டறிந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.மோதல்களைத் தவிர்த்து, பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.