மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலையில் வீடொன்றை இலக்கு வைத்த காட்டுயானை, வீட்டின் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
அப்போது வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே இருந்த பெண்கள் யானையைக் கண்டு அச்சமடைந்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தவாறு வீட்டைவிட்டு வெளியேறி தப்பியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டுக்குள் புகுந்த காட்டுயானை, அங்கு பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட நெல் மூடைகளைக் கிழித்து, அவற்றிலிருந்த நெல்லை உண்டதுடன், நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வீட்டை முற்றுகையிட்ட யானை; நெல் மூடைகள் நாசம் தப்பியோடிய பெண்கள் மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.அதிகாலையில் வீடொன்றை இலக்கு வைத்த காட்டுயானை, வீட்டின் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.அப்போது வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே இருந்த பெண்கள் யானையைக் கண்டு அச்சமடைந்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தவாறு வீட்டைவிட்டு வெளியேறி தப்பியுள்ளனர்.இதனையடுத்து வீட்டுக்குள் புகுந்த காட்டுயானை, அங்கு பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட நெல் மூடைகளைக் கிழித்து, அவற்றிலிருந்த நெல்லை உண்டதுடன், நெல் மூடைகளையும் சேதப்படுத்தியுள்ளது.போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.