• Jun 07 2026

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வௌியானது!

Tamil nila / Oct 16th 2024, 8:03 pm
image

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம் 2024.10.26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப் பெருவிரலில் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும்.

வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரல் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.




தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வௌியானது எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான குறியீடு இடப்பட்டுள்ளமையால், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம் 2024.10.26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப் பெருவிரலில் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும்.வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரல் தோதான குறியீட்டினால் அடையாளமிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement