• May 19 2026

துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

dorin / Dec 26th 2025, 10:15 pm
image

யாழில், துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது 75) என்பவரே மேற்படி  உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனகம் புளியடி வீதியில் இருந்து, புத்தூர் சந்தியூடாக நேற்று பின்னேரம் துவிச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தார். மெய்கண்டான் சந்திக்கு அண்மித்த பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்தது.

இதன்போது அந்த இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் நேற்றையதினம் 5.30 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி யாழில், துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது 75) என்பவரே மேற்படி  உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் கனகம் புளியடி வீதியில் இருந்து, புத்தூர் சந்தியூடாக நேற்று பின்னேரம் துவிச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தார். மெய்கண்டான் சந்திக்கு அண்மித்த பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்தது.இதன்போது அந்த இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் நேற்றையதினம் 5.30 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement