• Aug 20 2026

எல்-நினோ தாக்கம் மற்றும் பெரும்போகச் செய்கை! திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தீவிர கவனம்!

dorin / Aug 19th 2026, 2:35 pm
image

எல்-நினோ வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், 2026/27 பெரும்போகச் செய்கைக்கான நெல், தானியங்கள் மற்றும் காய்கறிச் சாகுபடியின் முன்னேற்றங்களை விரைவுபடுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அதிகாரிகளுக்குக் கடுமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (18) நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இக்கூட்டத்தில், எல்-நினோ தாக்கத்தினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து நீர்ப்பாசனத் துறை மற்றும் கமநல அபிவிருத்தித் துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், 2026/27 பெரும்போகச் சாகுபடியில் நெல், ஏனைய தானியங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்க அதிபர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றங்களை மதிப்பீடு செய்த அரசாங்க அதிபர், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்குமாறும், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தினார். 

இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் அவசர கோரிக்கைகள் மற்றும் கள நிலவரங்களைச் சமர்ப்பித்தனர்.

தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு விவசாயம், மீன்பிடி, முந்திரி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளின் பங்களிப்புடன் சிறப்பு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் போது, பெரும்போகச் செய்கைக்கான உர விநியோக திட்டம், விதை உற்பத்தி நிலவரம், தேங்காய் அபிவிருத்தி, விவசாயக் காப்பீடு மற்றும் நெல் கொள்முதல் திட்டங்களின் செயல்பாடுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன.

துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி எதிர்காலச் செயல்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. டி.கே. சசிகுமார், மாவட்ட நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் 

(கி. மா) பொறியியலாளர் ஜி. செந்தூரன், நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளர் டி. விவேக்சந்திரன், தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எச். ஜி. எஸ். பிரேமரத்ன, விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் டபிள்யூ. பிரதீப் நிரோஷன் விஜயஸ்ரீ, பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


எல்-நினோ தாக்கம் மற்றும் பெரும்போகச் செய்கை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தீவிர கவனம் எல்-நினோ வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், 2026/27 பெரும்போகச் செய்கைக்கான நெல், தானியங்கள் மற்றும் காய்கறிச் சாகுபடியின் முன்னேற்றங்களை விரைவுபடுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அதிகாரிகளுக்குக் கடுமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (18) நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் எட்டப்பட்டன.இக்கூட்டத்தில், எல்-நினோ தாக்கத்தினால் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து நீர்ப்பாசனத் துறை மற்றும் கமநல அபிவிருத்தித் துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், 2026/27 பெரும்போகச் சாகுபடியில் நெல், ஏனைய தானியங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்க அதிபர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றங்களை மதிப்பீடு செய்த அரசாங்க அதிபர், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்குமாறும், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் அவசர கோரிக்கைகள் மற்றும் கள நிலவரங்களைச் சமர்ப்பித்தனர்.தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு விவசாயம், மீன்பிடி, முந்திரி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளின் பங்களிப்புடன் சிறப்பு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது, பெரும்போகச் செய்கைக்கான உர விநியோக திட்டம், விதை உற்பத்தி நிலவரம், தேங்காய் அபிவிருத்தி, விவசாயக் காப்பீடு மற்றும் நெல் கொள்முதல் திட்டங்களின் செயல்பாடுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன.துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி எதிர்காலச் செயல்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. டி.கே. சசிகுமார், மாவட்ட நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் (கி. மா) பொறியியலாளர் ஜி. செந்தூரன், நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளர் டி. விவேக்சந்திரன், தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எச். ஜி. எஸ். பிரேமரத்ன, விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் டபிள்யூ. பிரதீப் நிரோஷன் விஜயஸ்ரீ, பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement