• Jun 02 2026

தேவாலய உணவை உண்ட 8 பேர் வைத்தியசாலையில்! நுவரெலியாவில் அதிர்ச்சி

Chithra / Jun 1st 2026, 10:47 am
image

நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேவாலய உணவை உண்ட 8 பேர் வைத்தியசாலையில் நுவரெலியாவில் அதிர்ச்சி நுவரெலியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுட 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement