ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும்" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிப்பதற்காக 28 பேர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட விசனம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து, புதிய அரசமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு ஆவணத்தைத் தயாரிப்பது பற்றி ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
இந்த முயற்சியில் ஆரம்பத்திலிருந்தே பங்கெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அந்தத் தொடர் கலந்துரையாடல்களின் முடிவிலேயே தற்போது 28 பேர் அடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியிலிருந்து நாம் ஒருபோதும் விலகப்போவதில்லை.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சிகளைப் புதிய குழுவின் செயற்பாடு பாதிக்காது என்று அவர் வலியுறுத்தினார்.
சட்டத்தரணிகள் பேரவையின் ஆவணத் தயாரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் இந்தக் கூட்டு முயற்சியில் பங்களிக்க விரும்பினால், அவர்களுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்" என்றும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
இனப்பிரச்சினைக்கான தமிழர் தரப்பின் கூட்டு நிலைப்பாட்டைத் தயாரிப்பதில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒற்றுமை முயற்சியைப் பலப்படுத்தும் ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு, ஏனைய கட்சிகளுக்கு கஜேந்திரகுமார் எம்.பி.அழைப்பு ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும்" என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிப்பதற்காக 28 பேர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட விசனம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் கூறுகையில்,தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து, புதிய அரசமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு ஆவணத்தைத் தயாரிப்பது பற்றி ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே நாம் ஆராய்ந்து வருகின்றோம்.இந்த முயற்சியில் ஆரம்பத்திலிருந்தே பங்கெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அந்தத் தொடர் கலந்துரையாடல்களின் முடிவிலேயே தற்போது 28 பேர் அடங்கிய வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியிலிருந்து நாம் ஒருபோதும் விலகப்போவதில்லை.இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சிகளைப் புதிய குழுவின் செயற்பாடு பாதிக்காது என்று அவர் வலியுறுத்தினார்.சட்டத்தரணிகள் பேரவையின் ஆவணத் தயாரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் இந்தக் கூட்டு முயற்சியில் பங்களிக்க விரும்பினால், அவர்களுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்" என்றும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.இனப்பிரச்சினைக்கான தமிழர் தரப்பின் கூட்டு நிலைப்பாட்டைத் தயாரிப்பதில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக்காட்டினார்.