• Apr 28 2026

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி அடையாளம் - நிசாம் காரியப்பர்

Chithra / Oct 9th 2025, 6:50 pm
image

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக 

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 

பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ரவி செனவிரட்ன தம்மிடம் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கான பதவியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் போது ரவி செனவிரட்ன இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிசாம் காரியப்பர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் இன்றைய தினம்(9) பதிவிட்டுள்ளார்.



இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது  என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில், தெரிவித்தார்.

இந்தத் தகவல்களை வெளியிட பாராளுமன்றம் கூட உத்தரவிடக்கூடாது என்று அவர்   கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசாரணைகளை சீர்குலைக்க மறைமுக வழிகளில் முயற்சிப்பவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி அடையாளம் - நிசாம் காரியப்பர் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ரவி செனவிரட்ன தம்மிடம் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கான பதவியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் போது ரவி செனவிரட்ன இவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.நிசாம் காரியப்பர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் இன்றைய தினம்(9) பதிவிட்டுள்ளார்.இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது  என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில், தெரிவித்தார்.இந்தத் தகவல்களை வெளியிட பாராளுமன்றம் கூட உத்தரவிடக்கூடாது என்று அவர்   கூறினார்.ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.விசாரணைகளை சீர்குலைக்க மறைமுக வழிகளில் முயற்சிப்பவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement