திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து போதை தடுப்பு தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (25)இடம் பெற்றது.
திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தி ஊடாக பயணம் செய்யும் வாகனங்களிலும்,பொது கட்டிடங்கள் பொது இடங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் த.பிரணவன் உட்பட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
"போதை பொருளை முற்றாக தவிர்ப்போம் நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதேச செயலக மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வொன்றும் இடம் பெற்றது. வளவாளராக கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் மல்சா ஜயரட்ண கலந்து சிறப்பித்தார்.
நச்சுத்தன்மை கொண்ட போதை பாவனையின் பாதக விளைவுகள் மற்றும் உடல் உள ரீதியான பாதிப்புக்கள் சமூக சீரழிவு தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.
இதில் முள்ளிப்பொத்தானை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த சமுதாயம் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தம்பலகாமத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து போதை தடுப்பு தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (25)இடம் பெற்றது. திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தி ஊடாக பயணம் செய்யும் வாகனங்களிலும்,பொது கட்டிடங்கள் பொது இடங்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் த.பிரணவன் உட்பட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்."போதை பொருளை முற்றாக தவிர்ப்போம் நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.இதனை தொடர்ந்து பிரதேச செயலக மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வொன்றும் இடம் பெற்றது. வளவாளராக கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் மல்சா ஜயரட்ண கலந்து சிறப்பித்தார். நச்சுத்தன்மை கொண்ட போதை பாவனையின் பாதக விளைவுகள் மற்றும் உடல் உள ரீதியான பாதிப்புக்கள் சமூக சீரழிவு தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.இதில் முள்ளிப்பொத்தானை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த சமுதாயம் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.