• Aug 21 2026

வறட்சி அபாயம் நீர் விநியோகத்தை துரிதப்படுத்த அரசு புதிய நடவடிக்கை

dorin / Aug 20th 2026, 12:43 pm
image

எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். 

இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வறட்சி அபாயம் நீர் விநியோகத்தை துரிதப்படுத்த அரசு புதிய நடவடிக்கை எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement