• May 16 2026

வாகன இறக்குமதியில் அதிரடி மாற்றம் - இன்று முதல் புதிய வரி விதிப்பு

Aathira / May 16th 2026, 11:52 am
image

இலங்கையில் குறிப்பிட்ட வகை இறக்குமதி பொருட்களுக்கு 50% கூடுதல் சுங்க வரி (Customs Import Duty Surcharge) விதிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிதி அமைச்சு வெளியிட்ட விசேட அரசிதழ் அறிவிப்பின் படி, சுங்க சட்டத்தின் (அத்தியாயம் 235) பிரிவு 10A கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு இன்று (16) முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 50% கூடுதல் வரி, பொதுவான மற்றும் முன்னுரிமை (General & Preferential) சுங்க வரி அடிப்படைகளுக்கும் பொருந்தும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வரி குறிப்பாக பல வகையான இறக்குமதி வாகனங்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கார்கள், ஸ்டேஷன் வாகனங்கள், ரேஸிங் கார்கள், ஆம்புலன்ஸ், சிறை வாகனங்கள், இறுதி ஊர்திகள், மோட்டார் ஹோம்கள் மற்றும் கோல்ஃப் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.

மேலும், என்ஜின் திறன், எரிபொருள் வகை (டீசல், ஹைப்ரிட், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவை) மற்றும் வாகன வயது அடிப்படையில் இந்த வரி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2026 மே 15 அல்லது அதற்கு முன் Letter of Credit (L/C) திறக்கப்பட்ட வாகன இறக்குமதிகளுக்கு இந்த புதிய வரி பொருந்தாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாகன இறக்குமதியில் அதிரடி மாற்றம் - இன்று முதல் புதிய வரி விதிப்பு இலங்கையில் குறிப்பிட்ட வகை இறக்குமதி பொருட்களுக்கு 50% கூடுதல் சுங்க வரி (Customs Import Duty Surcharge) விதிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நிதி அமைச்சு வெளியிட்ட விசேட அரசிதழ் அறிவிப்பின் படி, சுங்க சட்டத்தின் (அத்தியாயம் 235) பிரிவு 10A கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி விதிப்பு இன்று (16) முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய 50% கூடுதல் வரி, பொதுவான மற்றும் முன்னுரிமை (General & Preferential) சுங்க வரி அடிப்படைகளுக்கும் பொருந்தும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இந்த வரி குறிப்பாக பல வகையான இறக்குமதி வாகனங்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கார்கள், ஸ்டேஷன் வாகனங்கள், ரேஸிங் கார்கள், ஆம்புலன்ஸ், சிறை வாகனங்கள், இறுதி ஊர்திகள், மோட்டார் ஹோம்கள் மற்றும் கோல்ஃப் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.மேலும், என்ஜின் திறன், எரிபொருள் வகை (டீசல், ஹைப்ரிட், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவை) மற்றும் வாகன வயது அடிப்படையில் இந்த வரி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், 2026 மே 15 அல்லது அதற்கு முன் Letter of Credit (L/C) திறக்கப்பட்ட வாகன இறக்குமதிகளுக்கு இந்த புதிய வரி பொருந்தாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement